குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கவும் நீதிமன்ற அழைப்பாணை கிடைத்ததும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மெதமுலன டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்ட போது நடந்த நிதி மோசடி குறித்து கோத்தபாய ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய தாக்கல் செய்த மனு பிரீதி பத்மன் சூரசேன, அர்ஜூன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.