சட்டத்தில் தடையில்லை என்றால் மகிந்தவே வேட்பாளர்: பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 16 பேர் அணியுடன் தான் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை எனவும் அப்படியான அணியை ஏற்றுக்கொள்ளவும் தயாரில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து தற்போது ஆட்சி நடத்துகின்றன. சட்டரீதியான தடையில்லை என்றால், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கும் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி தெரிவு செய்யும் வேட்பாளருக்கு ஆதரளிக்கப்படும். இரண்டு பக்கமும் கால்களை வைத்துக்கொண்டிருக்கும் நபர்கள் குறித்து எதிர்காலத்தில் மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.