ட்ரம்ப்பும் கிம்மும் - மைத்திரியும் மஹிந்தவும்

Report Print Shalini in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ட்ரம்ப் மற்றும் கிம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வர்ணித்துள்ளார்.

இவர்கள் இருவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள கைகோர்த்து செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்றும், அதற்குள் இருவரும் இணைந்து வெற்றிக்காக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.