கோத்தபாயவின் பிடிவாதம் - ஆணை கொடுப்பாரா மஹிந்த?

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அமெரிக்கா - இலங்கை நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ள கோத்தபாய, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோத்தபாயவின் ஜனாதிபதி கனவு பலிக்காது என பலரும் தெரிவித்து வரும் நிலையில், அதனை மறுக்கும் கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவது சாத்தியம் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எவ்வித தடையும் இல்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டியது யார் என்பதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதியை சந்திப்பதற்காக கண்டி சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சட்டத்தில் பிரச்சினை இல்லை என்றால் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.