நான் இனவாதத்தை பரப்புவதாக கூறுவதற்கு இதுவே காரணம்

Report Print Sujitha Sri in அரசியல்

எமது உரிமைகள் எமக்கு வேண்டும் என கேட்பதாலேயே தன்னை இனவாதியென கூறுவதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனுக்குமான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

யாழ். கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பின்போது தற்போது நீங்கள் இனவாதத்தை பரப்புகின்றதாக கூறுவதற்கு காரணம் என்ன என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், தமிழ் மக்கள் வாயை மூடி இருக்க வேண்டும், நாம் செய்வதை செய்து கொண்டு போவோம் என தெற்கில் ஒரு நிலைப்பாடு உள்ளது.

எமது உரிமைகளை தான் நாம் கேட்கிறோம். எங்களிடம் இருந்து பிடுங்கிவற்றை தான் திரும்ப கேட்கிறோம். அதை அவர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானது என நினைத்து கொள்கின்றார்கள்.

எமது உரிமை வேண்டும் என்று கூறினால் எம்மை இனவாதி என்று கூறுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.