இலங்கை சீனாவிடம் பெற்ற மொத்த கடன் தொகை பற்றிய தகவல் வெளியானது

Report Print Steephen Steephen in அரசியல்
318Shares

இலங்கை சீனாவிடம் இருந்து கடந்த 2005ம் ஆண்டு முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை மொத்தமாக ஆயிரத்து 29 பில்லியன் ரூபாய் கடனாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆங்கில வார இதழ் ஒன்று இந்த தகவல்களை நிதியமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

தகவல்களுக்கு அமைய பெருந்தெருக்கள், மின் உற்பத்தி நிலைங்கள், நீர் வழங்கல் மற்றும் கட்டுமான பணிகளுக்கான இந்த கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனம், சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஆகியவற்றிடம் இருந்து இந்த கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட கடன் தொகையில் 188 பில்லியன் ரூபாய் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிர்மாணிக்க 72 பில்லியன் ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளது.

இதனை தவிர மொரகஹாகந்த நீர்தேக்கம் திட்டத்திற்கு 28.69 பில்லியன் ரூபாய், ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய 3 பில்லியன் ரூபாய், 15 பல் நோக்கு டீசல் கட்டமைப்புகளை கொள்வனவு செய்ய 4.9 பில்லியன் ரூபாய், ஹம்பாந்தோட்டை எண்ணெய் தாங்கி திட்டதிற்கு 7.4 பில்லியன் ரூபாய், மத்தள விமான நிலைய நிர்மாணிப்புக்கு 21.7 பில்லியன் ரூபாய், எம்.ஏ. 60 விமான கொள்வனவு திட்டத்திற்கு 4.63 பில்லியன் ரூபாய், ஊவா மாகாண மின் விநியோகத் திட்டத்திற்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய 3.8 பில்லியன் ரூபாய் என சீன வங்கிகளிடம் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட மொத்த கடன் 300 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒரு பில்லியன் ரூபாய் என்பது நூறு கோடி ரூபாவாகும்.