மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தயங்குவது ஏன்? மஹிந்த விளக்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தயங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழம்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிங்கப்பூரில் வைத்து அர்ஜூன் மகேந்திரன் அரசியல் வாதிகளுக்கு பணம் வழங்கிய விபரங்கள் அம்பலமாகும் என்ற காரணத்தினால், அரசாங்கம் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர தயங்குகின்றது.

அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கத்திற்கு ஆர்வம் கிடையாது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நாள் முதல் வாய்ச்சவடால் விட்டு வருகின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அர்ஜூன் மகேந்திரன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்.

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார் என்பது அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும்.

அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்பட்டால் சிலரின் உண்மை முகம் அம்பலமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.