ஞானசார தேரர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்?

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டுக்காக குரல் கொடுத்ததன் காரணமாகவே கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று அந்த அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கொலை உட்பட பெரிய குற்றங்களுக்காக ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்படவில்லை.

அவர் நாட்டுக்காக குரல் கொடுத்தன் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறிய குற்றத்திற்காக ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பௌத்த சட்டங்களுக்கு அமைய கொலை, கொள்ளை உட்பட ஏதாவது பாரதூரமான குற்றத்தை ஞானசார தேரர் செய்திருந்தால், ஜம்பர் அல்ல கோவணத்தை கட்டிவிட்டாலும் எதிர்க்க மாட்டோம்.

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்டு வரும் எதிர்ப்பை அரசியல்வாதிகள், அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதால், கடும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக படையினரை விற்று வாழ்க்கை நடத்தி வரும் அஜித் பிரசன்ன கூறியுள்ளார்.

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகளிடம் கருத்துக்களை பெற்று, அவர் சிறையில் அடைக்கப்பட்டது நியாயமானது என கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டு, முஸ்லிம் மக்களின் வாக்குகளை கவரும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அஜித் பிரசன்ன கூறியுள்ளார்.

பொதுபல சேனா கோத்தபாய ராஜபக்சவை உண்மையில் நேசித்தாலும் அஜித் பிரசன்ன போன்ற பௌத்த மதத்தையும் பிக்குமாரை நிந்திக்கும் நபர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், கோத்தபாயவுக்கும் பரிதாபமான நிலைமையே ஏற்படும் எனவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.