பொலிஸாரின் துப்பாக்கி சூடு! சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மங்கள

Report Print Vethu Vethu in அரசியல்

அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மாத்தறை, தங்க ஆபரண கடையில் கொள்ளையடித்த சந்தர்ப்பத்தில் கொள்ளைக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த அனர்த்தம் காரணமாக பொலிஸ் காண்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில், பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி விட முடியாதென நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் காண்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில் பிரதான சந்தேக நபரான சாமர இந்திரஜித் ஜயசுந்தர என்பவர் பொலிஸார் மீது குண்டு வீச முயற்சித்த போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளுடன் செயற்படும் போது சட்டத்தையே செயற்படுத்த வேண்டும். இவ்வாறான அனர்த்தங்களின் போது சந்தேக நபர்கள் சுட்டு கொல்லப்படுவதாக நல்லாட்சி என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.