16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 16 பேர் அரசாங்கத்தில் இருந்து விலகியமை குறித்து கவலையடைவதாகவும் அவர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கான சகல கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.