ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இருக்கும் ஐக்கியத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருவதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு கட்சிகள் இணைந்து முழு நாட்டையும் சமமான முறையில் அபிவிருத்தி செய்து முன்னோக்கி இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கும் போது பலரால் அதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சியை ஒதுக்கி தள்ளும் நோக்கமே அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருந்தது.

எனினும் அவர்களால் அது முடியாமல் போனது. சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினர் தற்போது அநாதரவாக விடப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.