கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம விடுத்துள்ள பணிப்புரை

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

புல்மோட்டை அரிசிமலை புனித பூமிக்குரிய காணியை உடனடியாக அடையாளம் கண்டு ஒதுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை அரிசிமலை புராதன விகாரைக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் அடங்கிய பிரதேசத்தை அடையாளம் காணலும், விகாரைக்குறிய காணிகளை அடையாளப்படுத்தி நில அளவை செய்தல் தொடர்பான விஷேட கூட்டமும் அண்மையில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விஷேட கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மேலும் கூறுகையில், குறித்த பிரதேசத்தில் குடியிருக்கின்ற மக்களுக்கு எதுவித பாதிப்புக்களும் வராத விதத்தில் அரிசிமலை விகாரையின் புனித பூமிக்குரிய காணிகளை தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் எல்லைக்கல் இட்டு அதனை நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யுமாறு பணித்துள்ளார்.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஷ, சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் ஜனாப் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.