அமெரிக்கா விலகியது இலங்கைக்கு நல்லதே - அமைச்சர் சரத்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியமை இலங்கை சாதகமானது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நேற்று சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அறிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்களை கொண்டு வந்தனர்.

பேரவையின் நிதி ரீதியான ஆதாரம் அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளே. இந்த நாடுகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான நிதியை அதிகளவில் வழங்கி வருகின்றன.

அமெரிக்கா விலகியதன் மூலம் மனித உரிமை பேரவையின் நிதி ஆதாரமான ஒரு செங்கல் கழன்று விட்டது என்றே கருத வேண்டும்.

அமெரிக்கா விலகியுள்ளதால், எதிர்காலத்தில் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. அத்துடன் இலங்கையின் விடயங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பங்களும் குறையக் கூடும் எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.