இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை படையினரும் அவர்களின் குடும்பத்தினரும்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் முப்படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பவத்தினர் அடங்களாக 160 பேர் இன்று இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அவர்கள், புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படையின் சீ-17 ரக விமானத்தில் இன்று அவர்கள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த ஒரு தரப்பினரும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இந்திய இராணுவ பேச்சாளர் அமன் ஆனந்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.