புலிகளின் சீருடைகள் மீட்பு, பொது மக்களே பாதுகாப்பை முன்னெடுக்க வேண்டும்! மகிந்த

Report Print Murali Murali in அரசியல்

வடக்கில் தற்போது சந்தேகத்துக்கிடமான இளைஞர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதுபோன்று, புலிகள் பயன்படுத்திய சீருடைகள், ஆயுதங்கள் என்பனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை பொது மக்கள் தாமாகவே முன்னெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் கடந்த காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையில், இவ்வாறான அறிவித்தலை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லையெனவும், மக்கள் இன்று பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.