திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் மறுசீரமைப்பு

Report Print Dias Dias in அரசியல்

திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்பதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் தலைமையில் திருகோணமலை நகரில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் இறுதியில் வட்டாரக் கிளைகள், பிரதேசக் கிளைகள், மாவட்டக்கிளை என்ற அமைப்பில் கட்சி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது எனவும்,

ஒரு வட்டாரக் கிளையானது ஆகக் குறைந்தது 50 உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும் எனவும்,

மறு சீரமைப்பு பணிகளை எதிர்வரும் 2018.08.15 இற்கு முன் நிறைவு செய்ய வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பானது 53 வட்டாரக் கிளைகள், ஆறு பிரதேசக் கிளைகள், ஒரு மாவட்டக் கிளை என்ற அடிப்படையில் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பதற்காக இரா.சம்பந்தனின் தலைமையில் 14 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.