நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குருநாகலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பொய்யான விடயங்களின் அடிப்படையில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் போது எந்தவொரு வெளிநாட்டு நிதியும் அன்பளிப்பாக கிடைக்கவில்லை. கட்சிக்கும் கிடைக்கவில்லை.
அந்த வகையில் தற்போதைக்கு இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் பெற்றுள்ளோம். மானநஷ்ட இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளோம்.
அதற்கு உரிய முறையில் பதில் அளிக்கப்படாது போனால் வழக்குத் தொடரவுள்ளோம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.