எதிர்க்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் கூட்டு எதிர்க்கட்சி?

Report Print Kamel Kamel in அரசியல்
104Shares

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 80 ஆக உயர்வடையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தை விட்டு விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படுவார்கள்.

இதன்படி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைய உள்ளது.

மேலும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் மேலும் 10 பேர் இணைந்து கொள்ள உள்ளார்கள்.

முதலில் கூட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.