இலங்கை சினிமா துறை பிரபலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

Report Print Sinan in அரசியல்
98Shares

இலங்கை சினிமா துறையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான ரோய் டீ சில்வாவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ரோய் டீ சில்வா நேற்றுமுன் தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

தனது 80 ஆவது வயதில் காலமாகிய ரோய் டீ சில்வாவின் உடல் பொரள்ளையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மற்றும் இலங்கை சினிமா துறையின் பிரபலங்கள் உட்பட பலரும் ரோய் டீ சில்வாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.