எந்த நாடும் எனக்கு காசு தரவும் இல்லை, இதுவரை நான் அப்படி கூறியதும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரோய் டீ சில்வாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
“எந்த நாடும் எனக்கு காசு தரவும் இல்லை, இதுவரை நான் அப்படி கூறியதும் இல்லை. இங்குள்ளவர்கள் தான் அந்த கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளனர். இந்த விடயத்தை அரசியல் சூழ்ச்சியாகவே தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் எந்த வியாபாரம் நடந்தாலும் அதற்கு காரணம், மஹிந்த, கோத்தா மற்றும் பஸில் தான் என குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் அண்மித்ததாலா அல்லது பிரச்சினையை திசை திருப்புவதற்காகவா இந்த கதையை கட்டிவிட்டுள்ளார்கள் என தாம் சந்தேகிப்பதாகவும் மஹிந்த தெரிவித்தார்.