ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தனது கடமைகளை செய்யும் கட்சியல்ல என காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் எதிர்கால சந்தியினர் பற்றி சிந்தித்து செயற்படுகிறது. இப்படியான பின்னணியில் தேர்தல் ஒன்றின் போது யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு இலகுவாக புரிந்து விடும்.
அரசுக்கு சொந்தமான காணிகளிலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளிலும் நீண்டகாலமாக விவசாயம் செய்து கொண்டு அதில் வசிப்போருக்கு அந்த காணிகளை சொந்தமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காணி உரிமையில்லாத பல அரச நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படும். நாட்டில் 12ஆயிரம் அரச நிறுவனங்கள் இருப்பதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.