மகிந்த ராஜபக்ச, பணக்காரராக முடியும்! இராஜாங்க அமைச்சர் கூறும் வழிமுறை

Report Print Ajith Ajith in அரசியல்
79Shares

முடிந்தால், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என்று மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த சவாலை விடுத்தார்

கடந்த ஜூன் 25ம் திகதியன்று குறித்த பத்திரிகையில் வெளியான செய்தியில் மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக சீனாவின் சீ.எச்.இ.சி என்ற நிறுவனம் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

எனினும் இதனை மறுத்துள்ள மகிந்த ராஜபக்ச, சீன நிறுவனத்திடம் இருந்து 7.6 மில்லியன் அமரிக்க டொலர்களை பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் தமது நியாயத்தை மகிந்த அமரிக்க நீதிமன்றத்தில் நிரூபித்தால். அவர் மிகப்பெரிய பணக்காரராக வரமுடியும் என்றும் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்

ஏனெனில் அமரிக்க சட்டப்படி ஒருவருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் முழுமையான நிதியை நட்டஈடாகக்கோர முடியும் என்றும் அஜித் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்

குறிப்பாக ஒரு பில்லியன் டொலர்களையாவது மஹிநதவினால் நட்டஈடாக பெறமுடியும் என்றும் அஜத் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்தவுக்கு பணம் வழங்கிய செய்தியை சீனாவின் நிறுவனம் இன்னும் மறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.