பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து கொள்வது அவசியம்:ஐ.நாவில் இலங்கை

Report Print Ajith Ajith in அரசியல்
53Shares

பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து கொள்வது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தெரிவித்துள்ளது.

முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு பிரிவுகளின் தலைவர்களது மாநாட்டின்போது இலங்கையின் கூட்டுப்படை தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.டி.பி பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள இந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தினால் துன்பப்பட்ட மக்களின் அனுபவங்களை இலங்கை அறிந்துள்ளது.

எனவே அதற்கான அடிப்படை காரணங்களுக்கு பரிகாரம் தேடப்பட வேண்டும் என்று பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மாநாட்டில் இலங்கையின் படையதிகாரிகள் பலரும் பங்கேற்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.