அமெரிக்காவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அசிங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் அசிங்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்த பிரதி அமைச்சர் இவ்வாறு அசிங்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சீனா நிறுவனம் ஒன்று பெருந்தொகை பணம் வழங்கியதாக நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை வெளியிட்ட நிவ்யோர்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப்பிற்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்துமாறு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கைக்கமைய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அழைப்பேற்படுத்தியுள்ளார். எனினும் குறித்த ஊடகவியலாளரின் தொலைபேசி செயலிழந்த நிலையில், “நீங்கள் அழைத்த மொபிடெல் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகவியலாளரின் தொலைபேசி இலக்கம் எப்படி மொபிடெல் என கூறும் என அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தமையினால் அமைச்சருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டதாக குறித்து ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers