சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்! மகிந்த மற்றும் ரணில் பக்கம் இரு கிரிக்கெட் பிரபல வீரர்கள்..

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக அரசியலுக்குள் நுழைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமிந்த வாஸ் திரைப்படம் ஒன்றின் ஊடாக அரசியலில் பிரவேசிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை சமிந்த வாஸ் அண்மையில் இந்தியாவிற்கு சென்று பல சோதிடர்களை சந்தித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவை அரசியலுக்கு வருமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்திருந்ததுடன் அவரை அதனை நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், சமிந்த வாஸ் அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதனிடையே அடுத்த தேர்தல் ஒன்றின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பின் ஊடாக கிரிக்கெட் வீரர் திலக்கரட்ன தில்ஷானும் அரசியலில் பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers