டெனீஸ்வரனுக்கு அமைச்சுப் பதவியை வழங்காதிருப்பதில் முதலமைச்சர் விடாப்பிடி!

Report Print Ajith Ajith in அரசியல்

வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மேன்முறையீட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவிகளை அவரிடம் மீள கையளிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிவித்தல் வட மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து, வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

குறித்த நிலையில், முதலமைச்சர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை மேன்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Latest Offers