இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும்: சிங்கப்பூர் பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையுடன் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷிங் லுங் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினருக்கு இன்று மதிய போசன விருந்தொன்றை வழங்கிய போதே சிங்கப்பூர் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது சிங்கப்பூரில் முதலீடு செய்யும் வேறு வெளிநாட்டு தொழிற்துறையினரையும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஊக்கப்படுத்த இந்த உடன்படிக்கை மூலம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் இலங்கையர்கள் புதிய தொழில் நுட்ப அறிவு பெற்றுக்கொள்ள முடியும் என்பது அவர்கள் அதிகளவான வேலை வாய்ப்புகளையும் பெற முடியும் எனவும் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார, நிர்வாகம் மற்றும் சமூகம் சார்ந்த துறைகளில் இரண்டு நாடுகளும் நெருங்கி செயற்படுவதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.