விக்கி, விஜயகலா, அனந்திக்கு மீண்டும் சிக்கல்! வெளிநாடு செல்லும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Report Print Shalini in அரசியல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்மையை கண்­ட­றியும் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு சென்று தனித்தனியாக இந்த முறைப்­பா­டு­களை பதிவு செய்துள்ளார்.

அத்­துடன் ஜூலை 5 ஆம் திகதி வடக்கில் இடம்­பெற்ற கரும்­பு­லிகள் தினம் தொடர்­பிலும் முறைப்­பாடு செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் குறித்து முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த விட­யத்தை வர­வேற்று, இனங்­க­ளுக்கு இடையில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக கூறி அனந்தி மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

விஜ­ய­கலா மகேஸ்­வரன் வெளி­நாடு செல்­ல முன்னர் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த தனது முறைப்­பாட்டில் கோரி­யுள்ளார்.

1ஆம் முறைப்பாடு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதும், 2 ஆம் முறைப்­பாடு விஜ­ய­க­லா­ ம­கேஸ்­வரனுக்கு எதி­ராகவும், மூன்றாவது முறைப்பாடு வட­மா­காண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராகவும் செய்யப்பபட்டுள்ளது.