விடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலாவின் கருத்து! மனம் திறந்தார் சிவாஜிலிங்கம்

Report Print Sujitha Sri in அரசியல்

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்ற விஜயகலாவின் கருத்து தவறானது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தெற்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என்பதை கூறும் உரிமையானது விஜயகலாவிற்கு இருக்கிறது. இதனை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

எனினும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறுவது தவறானது. யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் அரசியலமைப்பை மீறவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.