16 பேரின் அமைப்பாளர் பதவிகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

16 பேரின் அமைப்பாளர் பதவிகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், அவர்களின் அமைப்பாளர் பதவிகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

அமைப்பாளர் பதவிகளில் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதா, இல்லையா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

கட்சி மறுசீரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர கட்சி மறுசீரமைப்பு பணிகளில் பங்கெடுத்து வருகின்றார்.

ஏனைய உறுப்பினர்களும் இந்தப் பணிகளில் இணைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அமைப்பாளர் பதவிகள் குறித்து தீர்மானிக்க நேரிடும் என ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.