மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பான ஆய்வுகளை நடத்த புலம்பெயர் தமிழர்களின் பிரதான தலைவரான இந்திய பேராசிரியர் போல் நியூமன் இலங்கை வந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை பத்து முழுமனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை மண்டையோடுகள் உட்பட மனித எச்சங்களும், மேலும் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மனிதப் புதைக்குழி இருக்கும் பகுதிக்கு, வடக்கில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பேராசிரியர் நியூமனை இரகசியமான அழைத்து சென்றுள்ளதாகவும், இது குறித்து புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்காது மறைத்துள்ளதாகவும் குறித்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, போல் நியூமன் மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதப் புதைக்குழி அகழ்வு இடம்பெறும் இடத்தில் இராணுவ முகாம் இருந்துள்ளதாகவும் அவர் மனித உரிமை பேரவையில் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.