சுவிஸில் விடுதலைப் புலிகளுக்காக மீண்டும் நிதி திரட்டும் புலி உறுப்பினர்கள்?

Report Print Nivetha in அரசியல்

சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மீண்டும் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் லுசன் – பேர்ன், சூரிச், ஷொப்னசன் பாசல், ஆராவ் ஆகிய பிராந்தியங்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் இவ்வாறு நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என வழங்கிய தீர்ப்பை அடுத்தே அங்கு மீண்டும் அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சுவிஸ் தலைவர் அப்துல்லா ஜெயபாலன் குறிப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளமை மீண்டும் தெற்கு அரசியலை கொதிநிலைப்படுத்தியுள்ளது.