தாம் புலிகளின் குழுவில் அங்கம் வகிக்கவில்லை- பினாங் பிரதி முதலமைச்சர் ராமசாமி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் பெறவே தாம் அழைக்கப்பட்டதாகவும் அந்தக்குழு விடுதலைப்புலிகளின் குழு அல்ல என்றும் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கையில் அரசியலமைப்புக்குழு அமைக்கப்பட்டது.

அதில் விடுதலைப்புலிகளின் சார்பில் ராமசாமியும் அங்கத்தவராக செயற்பட்டார்.

இதனை கேள்விக்கு உட்படுத்தி வெளியான குற்றச்சாட்டுக்கு ராமசாமி பதிலளித்துள்ளார், விடுதலைப்புலிகளின் சார்பில் குறித்த குழுவில் அங்கம் பெறவே தாம் அழைக்கப்பட்டதாக கூறியுள்ள அவர் அதில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இருக்கவில்லை.

சர்வதேசத்தில் உள்ள கல்வியாளர்கள், மற்றும் நடவடிக்கையாளர்களே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்குழு தொடர்பான கருத்து, இடைக்கால நிர்வாக யோசனையின் கீழ் உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதேபோன்ற குழு ஒன்று இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் அமைக்கப்பட்டபோது அதிலும் தாம் பங்கேற்றதாக ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.