விஜயகலா எம்.பி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு

Report Print Murali Murali in அரசியல்

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் பேசிய விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சர் பதவியையும் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியிலும் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.