சமல் ராஜபக்சவே சரியானவர்! அடுத்த ஜனாதிபதி இவரா?

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகைத்தந்திருந்தவேளை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்லா சமூகத்தினருடையவும் வரவேற்பைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒருவர் சமல் ராஜபக்ஷ என்பதை நாம் அறிவோம். சமல் ராஜபக்ஷதான் தகுதியானவர் என டிலான் பெரேரா, குமார வெல்கம போன்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிரணியிலுள்ள சகல கட்சிகளும் கூட்டு பொதுஜன முன்னணி எனும் பெயரில் மலர் மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறினார்