எந்த நேரத்திலும் மரண தண்டனையை அமுல்படுத்த தயார்

Report Print Kamel Kamel in அரசியல்
248Shares

எந்த நேரத்திலும் மரண தண்டனையை அமுல்படுத்தவதற்கு தயார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஸ்திரமான தீர்மானம் ஒன்றை எடுத்தால், தண்டனை அமுலாக்கத்திற்கு எந்த நேரத்திலும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தேவையான தூக்குமேடை மற்றும் அதற்கு தேவையான அனைத்து கருவிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் உண்டு என தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அலுகோசுக்கள் நாட்டில் பதவியில் இல்லாத போதிலும், தண்டனை நிறைவேற்றத்திற்கு அது தடையாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இறுதியாக இலங்கையில் ஜே.எ.சந்திரதாச என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.