இலங்கையில் பாடகியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட பல குற்றச்செயல்கள் குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெறுவதாக சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு குடும்ப பிரச்சினையே காரணமாக அமைவதால், குடும்பம் சம்பந்தமான விடயங்களில் பொலிஸார் தலையீடு செய்வது சிரமமாகும்.
இவ்வாறான குற்றச்செயல்களுள் அண்மையில் பாடகியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அடங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா போதைப்பொருள் வியாபாரி ஆவார்.
மேலும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.