கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி

Report Print Sujitha Sri in அரசியல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே கூட்டு எதிர்க்கட்சி காத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.பீ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர், அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வரும் வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும்.

அத்துடன் அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை விவகாரத்தை கொண்டு வருவது, பிணைமுறி மோசடி விடயத்தை மறைப்பதற்கான முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளார்.