விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றார் ரஞ்சன்! அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்

Report Print Shalini in அரசியல்

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடயமே விடுதலைப்புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து.

இதையடுத்து பல அரசியல் சார்ந்த விடயங்கள் அரங்கேறி தனது இராஜாங்க அமைச்சு பதவியையும் விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா செய்துள்ளார்.

“இந்த சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஊடகங்களுக்கு முன்பாகவே உரையாற்றியிருந்தார்.

இதன் முடிவில் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் மற்றும் விஜயகலாவுக்கு புனர்வாழ்வளிப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவருடைய கூற்றுக்கு பதில் தெரிவித்து வடமாகாண முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில்,

“எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.

வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன்.” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றுள்ளார்.

“முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்­வ­ர­னுடன் இணைந்து வடக்கில் கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொள்ள நான் தயா­ராக உள்ளேன்.

அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும்” என்றார்.