யாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது! ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக கொழும்பு பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், யாழ். கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது.

இதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ். கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.

அத்துடன், யாழ். கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.