வடக்கு முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார்

Report Print Sumi in அரசியல்

இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.