தடை கோரும் விக்கியின் மனுவில் முறையான ஆவணங்கள் இல்லை!

Report Print Rakesh in அரசியல்

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆவணங்களை முறையாகச் சமர்ப்பியுங்கள் என்று உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.

வடக்கு அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி முதலமைச்சர் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலப் பிரதியாக இல்லாமல் உள்ளமையால், மூலப் பிரதிகளைச் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கடந்த 4ஆம் திகதி உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.