தான் ஒருபோதும் அதை செய்யப்போவதில்லை! விஜயகலா திட்டவட்டம்

Report Print Murali Murali in அரசியல்

இன வெறுப்பை தூண்டும் வகையில் தான் ஒருபோதும் விடுதலைப் புலிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் இருந்து விலகுவதுடன், நாட்டை விட்டு வெளியேறப்போவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகம் வினவியது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “இன வெறுப்பை தூண்டும் வகையில் தான் ஒருபோதும் விடுதலைப் புலிகள் குறித்து பேசவில்லை.

நான் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் இதற்கான பதில் கிடைக்கும்.

நான் அமைச்சர் பதவியை மாத்திரமே இழந்துள்ளேன். எனினும், அரசியலை விட்டு ஒருபோதும் விலகப்போவதில்லை. தொடர்ந்தும் மக்களுக்காக சேவை செய்வேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.