கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக நீரோட்டத்துக்குள் வரவேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமாயின், ஜனநாயக நீரோட்டத்துக்கு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா?

பதில் - இல்லை அவ்வாறு எந்த பேச்சும் இடம்பெறவில்லை. ஜனநாயக தலைவரே எமக்குத் தேவை. அவர்தான்; மஹிந்த ராஜபக்ஷ. அதனால், ஏனையவர்கள் தொடர்பில் பேசத் தேவையில்லை.

கேள்வி: கோட்டாபய ராஜபக்;ஷவுக்கு (ஜனாதிபதி வேட்பாளராக) விருப்பம் இல்லையா?

பதில்: விரும்பமில்லை என்றில்லை. ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்தால் அவராலும் முடியும் - என்று குமார வெல்கம தெரிவித்துள்ளார்.