விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேவாலயத்தில் தேங்காய் உடைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சீனிகம தேவாலயத்தில் இன்றைய தினம் தேங்காய்கள் உடைக்கப்பட்டுள்ளன.

விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு தேங்காய்கள் உடைக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு தேங்காய் உடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த இடத்தில் அரை மணிநேரம், கூட்டு எதிர்க்கட்சியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.