விஜயகலாவின் புதிய குற்றச்சாட்டு! ஆராய்ந்து வருகின்றார் நாமல்

Report Print Shalini in அரசியல்

விஜயகலா மகேஸ்வரனுக்கு பணம் கொடுக்க வேண்டிய எந்த தேவையும் எமக்கு இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் எந்த அரசியல்வாதிகளும் வாகனத்தில் போதைப் பொருட்களை கடத்த வில்லை.

ஆனால் “கடந்த ஆட்சி காலத்தில் அரசியல்வாதிகளின் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாம் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. அவருக்கு பணம் வழங்குவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதைப் பொருட்களை கடத்துகின்றனர் எனும் குற்றசாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...