மகிந்தவை தவிர வேறு உலகம் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தவிர தமக்கு வேறு உலகம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தேவை ஜனநாயகமான தலைவர் எனவும் மகிந்த ராஜபக்ச ஜனநாயக தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு பின்னர், கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவா? என வெளியில் இருந்த ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே குமார வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்தால், அவர் ஜனாதிபதியாக பதிவிக்கு வர முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ச மாத்திரமே அரச தலைவராக இருக்க முடியும்.

அரசாங்கத்தை கவிழ்த்து அவரை அரச தலைவராக்கவே நாங்கள் முயற்சித்து வருகிறோம் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.