அமிர்தலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலை விஜயகலாவுக்கும் ஏற்படுமா?

Report Print Steephen Steephen in அரசியல்

விஜயகலா மகேஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்பட்ட போது, அமிர்தலிங்கம் உட்பட எதிர்க்கட்சியில் இருந்த 17 பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நீக்கினார்.

இதனடிப்படையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அப்படியான தீர்மானத்தை எடுப்பார் என எண்ணுவதாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.