மத நல்லிணக்கத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டை மீண்டும் யுத்தம் ஒன்றுக்குள் தள்ளாது தொடர்ந்தும் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு வந்துள்ள பக்தர்களின் நலன் அறியும் நோக்கில் அங்கு சென்றிருந்த போதே இராணு தளபதி இதனை கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் கடந்து வரும் போது பொறுப்பாளர்கள் என்ற வகையில் நான் உட்பட இராணுவத்தினர் அந்த மக்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.

இராணுவ தலைமையினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களை கண்டு மக்கள் அதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

விகாரைகள், கோயில்களை இணைத்து மத நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். ஒரு நாடு, ஒரு நாட்டவர்கள் என்ற முறையில் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

உலகில் உள்ள மூன்று பிரதான மதங்களான முஸ்லிம், இந்து, பௌத்த ஒன்றாக இணைந்து மத வழிபாடுகளில் ஈடுபடும் ஒரே இடம் கதிர்காமம். கதிர்காமத்தை சர்வமத வழிபாட்டுத்தலம் என அழைக்கலாம் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கதிர்காம கந்தனுக்கும் வள்ளிக்கும் இடையிலான திருமணத்தை நினைவுகூரும் வகையில் வருடந்தோறும் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு, கிழக்கில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாத யாத்திரையாக கதிர்காமம் வருகின்றனர்.

இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இராணுவ தளபதி நேற்று யால இலக்கம் 2 வலய பகுதிக்கு விஜயம் செய்தார்.