போதைப் பொருள் கலாசாரத்தை நாட்டுக்குள் கொண்டு வந்த அரசியல்வாதிகளையும் தண்டிக்க வேண்டும்! ஜே.வீ.பி கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்துவோர், அதனை விநியோகிப்போருக்கு மட்டுமல்ல, அந்த கலாசாரத்தை நாட்டுக்கு கொண்டு வந்த அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவது அல்லது அமுல்படுத்தாமல் இருப்பது விவாதத்திற்குரியது.

விமானநிலையம், துறைமுகத்தை சோதனையிடும் போது கொள்கலன்களில் போதைப் பொருள் கைப்பற்றப்படுகிறது. அரசியல்வாதிகளின் உதவியுடன் அவை கொண்டு வரப்படுகின்றன.

போதைப் பொருளை கொண்டு அரசியல்வாதிகளையும் நபர்களையும் அரச அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் பாதுகாத்து வருதே தொடர்ந்தும் நடந்து வருகிறது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.